ஒன்லைன் மூலம் மோசடி செய்த 30 சீன பிரஜைகளை நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இக்குழுவினர் BITCOIN ஊடாக இணையத்தில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்தமை முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தங்கியிருந்து ஒன்லைனில் பணம் மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெருமளவான இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறான மோசடி தொடர்பில் தகவல் தெரிந்தால் தமக்கு அறிவிக்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
மேலும் வீடுகளை வாடகைக்கு விடும்போது பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.