ரஷ்யாவிடமிருந்து இந்தியா இறக்குமதிகளை அதிகரிக்கக் கூடாது என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி(Jen Saki), இந்தியா ரஷ்யாவிடமிருந்து இறக்குமதிகளை அதிகரிக்கும் என்று கருதவில்லை என்றார்.
ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் போன்றவற்றை அமெரிக்காவின் தடையை மீறி இந்தியா வாங்க உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஜென் சாகி(Jen Saki) ஒவ்வொரு நட்பு நாடும் அமெரிக்கா ரஷ்யாவுக்கு விதித்த பொருளாதாரத் தடைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆனாலும் ஒவ்வொரு நாடும் தங்கள் சொந்த முடிவையே எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்கும் எண்ணெய் மொத்தத்தில் ஒன்று அல்லது 2 சதவீதம் என்று குறைந்த அளவில் இருப்பதாகவும் ஜென் சாகி(Jen Saki) தெரிவித்தார்.
இந்நிலையில் இந்தியாவுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைத்தால் வாங்கப் போவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்(Nirmala Sitharaman) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்த நிலையில், கடந்த சில வாரங்களில் இந்தியா ரஷ்யாவிடமிருந்து இறக்குமதியை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.