இந்தியாவிலிருந்து கள்ள கடவுச் சீட்டில் வெளிநாடு பறக்க வெளிக்கிட்ட ஒட்டுக்குழு திலீபன் கைது
ஒட்டுக்குழு உறுப்பினரான வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற ஈபிடிபி கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் அங்கிருந்து பிறிதொரு கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்ட நிலையில் இந்தியாவின் கேரளாவின் கொச்சி என்ற இடத்தில் வைத்து தமிழகப் பொலிஸாரால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவின் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒட்டுக்குழுக்களின் போலி அரசியல் பிசு பிசுத்துப்போயுள்ள நிலையிலேயே உண்ணி களன்றதுபோல் இவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.