இந்தியாவில் அனைத்து விமானநிலையங்களிலும் கொவிட் சோதனை!

You are currently viewing இந்தியாவில் அனைத்து விமானநிலையங்களிலும் கொவிட் சோதனை!

உலகெங்கிலும் மீண்டும் தீவிரமடைந்துவரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை தடுக்கும் நோக்கில், இந்தியா முழுவதுமுள்ள அனைத்து விமானநிலையங்களிலும் கொவிட் சோதனை தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 8 ஆயிரத்து 700 விமானங்களில் 15 லட்சம் பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 200 பேருக்கு தொற்று இருந்ததாகவும் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் மரபணு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிலருக்கு பி.எப். 7 உருமாறிய ஒமிக்ரோன் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்த மாண்டவியா, இந்தியாவின் கொவிட் தடுப்பூசி இத்தகைய வைரசையும் முறியடிக்கும் ஆற்றல் கொண்டது என்று கூறினார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply