சீனா, ஐரோப்பாவை அடுத்து ஆசிய, ஆபிரிக்க நாடுகளையும் “கொரோனா” வைரஸ் பீடிக்க தொடங்கியிருப்பதால், அங்கும் கடுமையான விதிகள் அமுல்படுத்தப்படுகின்றன.
இதன்படி, இந்தியாவில் அடுத்த 21 நாட்களுக்கு நாடளாவிய ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக இந்தியப்பிரதமர் “நரேந்திர மோடி” அறிவித்துள்ளார். “கொரோனா” பரவலிலிருந்து நாட்டை காப்பாற்ற இது அவசியமான நடவடிக்கையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தலும், ஊரடங்கு உத்தரவையும் மதிக்காதவர்கள்மீது காவல்த்துறை மூங்கில் தடியடி, கசையடி உள்ளிட்ட பல்வேறு தண்டனைகளை ஆங்காங்கே வழங்கிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.