இந்தியாவில் கொரோனா ; குணமடைந்தோரின் அளவு 42.6% ஆக உயர்வு!

  • Post author:
You are currently viewing இந்தியாவில் கொரோனா ; குணமடைந்தோரின் அளவு  42.6% ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 1,45,380 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 146 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 4வது நாளாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 6,000ஐ கடந்துள்ளது.

இந்நிலையில், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவர்களில் இதுவரை 60,490 பேர் குணமடைந்துள்ளனர், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,167 ஆக அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 80,722 ஆக அதிகரித்துள்ளது.

அதே போல கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் அளவு 42.6% ஆக உயர்ந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள