இந்தியாவில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உத்தியோகபூா்வ தரவுகளின் பிரகாரம் 4 இலட்சத்தைக் கடந்துள்ளது.
கடந்த 39 நாட்களில் மட்டும் ஒரு இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவானதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உண்மையில் 10 இலட்சத்துக்கு மேல் இருக்கலாம் என சுகாதார நிபுணர்கள் கணிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் உத்தியோபூா்வ கொரோனா மரணங்களில் எண்ணிக்கை 4 இலட்சத்தைக் கடந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரேசிலை அடுத்து இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் ஆபத்தான டெல்டா வைரஸ் திரிவு கண்டறியப்பட்டு பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த மே மாதத்தில் நாட்டில் தினசரி 4 இலட்சம் வரையான தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். இந்த எண்ணிக்கை தற்போது தினசரி சராசரி 40 ஆயிரமாக பதிவாகி வருகிறது.
இதேவேளை, இரண்டாவது அலை பாதிப்பு அடங்குவதற்குள் இந்தியாவில் மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஒடிஷா, சத்தீஸ்கர், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாகி வருவதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.