உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஆண்களே அதிக அளவில் உயிரிழந்து வருகின்றனர் என ஆய்வுகளில் தெரியவந்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டுமே அது மாறுபட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் ஆண்களை விட, பெண்களே அதிக அளவில் உயிரிழந்திருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
- இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் 39 வயது வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் ஆண்களே அதிகமாக உயிரிழந்துள்ளனர்.
- அதேநேரத்தில், 40 முதல் 49 வயது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 2.1 விழுக்காடு பேர் உயிரிழந்துள்ள நிலையில், பெண்கள் 3.2 விழுக்காடு பேர் மரணமடைந்துள்ளனர்.
- அதேபோல், 80 வயதுக்கு மேற்பட்டவர்களிலும் பெண்களே அதிக அளவில் உயிரிழந்துள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.