கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு எத்தியோப்பியா. இந்நாட்டின் ஹொலைதா மாகாணம் கிண்டோ டிட்யே மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக டிட்யே மாவட்டத்தில் நேற்று திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை
இந்தியாவின் (India) கேரளா (Kerala) மாநிலம் வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 380ஐ கடந்துள்ளது.
மேலும் பலர் மண்ணில் புதைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் இருந்தும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாலியார் ஆற்றில் இருந்தும் சடலங்கள் கிடைத்துள்ளன.
அத்துடன், மீட்புப்பணிகளின் போது உடல்கள் கிடைக்காவிட்டால் நாளை மீட்புப் பணியை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், காணமால் போனோரின் எண்ணிக்கை 180ஆக உள்ள நிலையில், ரேடார், ட்ரோன் மூலம் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.