இந்தியா தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி : பாகிஸ்தான் தளபதிகள் உறுதி !

You are currently viewing இந்தியா தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி : பாகிஸ்தான் தளபதிகள் உறுதி !

காஷ்மீரில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் படைகளும் முழு கவனத்துடன் காத்திருக்கின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி சையத் ஆசீம் முனீர் தலைமையில் அந்நாட்டு இராணுவத்தின் உயர்நிலை அதிகாரிகள் கலந்து கொண்ட சிறப்பு கூட்டம் (02)  நடைபெற்றது.

நடத்தப்பட்ட உயர்மட்ட இராணுவ கூட்டத்தில், இந்தியாவின் குற்றச்சாட்டுகளை எதிர்த்து உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில், இந்தியா எந்தவொரு தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டாலும் அதற்கு உரிய பதிலடி அளிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply