இந்திய தேசியப் புலனாய்வுப் பணியகம் சொல்லும் ஆட்டுக்குட்டி-புலி-ஓநாய்க்கதைகள் நீண்ட காலத்திற்கு ஓடாது புலியால் ஆட்டுக்குட்டிகளுக்கு ஆபத்து எனக்கூறி புலிகளை முற்றாக அழித்துவிட்டதாக ஓநாய்கள் அறிக்கை விட்டன.
இருப்பினும் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை புலி மீதான தடையை ஓநாய்கள் அறிவித்துக்கொண்டே இருக்கின்றன.
இல்லாத புலிக்கு தடை எதற்கு என்று அப்பாவி ஆட்டுக்குட்டிகளால் கேட்க முடியவில்லை.
ஏனெனில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புலிக்கதைகளை சொல்லியே தடையை நீடிக்கின்றன ஓநாய்கள்.
இம்முறை தன் சொந்தக் காட்டுக்குள்ளேயே புலியை பிடித்துவிட்டதாக ஓநாய்கள் அறிவிக்கின்றன.
என்னடா என்று எட்டிப் பார்த்தால், சில ஆட்டுக்குட்டிகளை பிடித்து வைத்து புலி என்று ஒத்துக்கொள்ளும்படி சித்திரவதை செய்கின்றன ஓநாய்கள்.
இந்தமுறை புலி மீதான தடைக்கு ஓநாய் சொல்லும் கதை இது என்று தெரிந்தும் அதை தட்டிக் கேட்க முடியாமல் இருக்கின்றன ஆட்டுக் குட்டிகள்.
குறிப்பு – இது ஒரு அனிமல் கதை. இதை படித்ததும் உங்களுக்கு NIA சோதனை நினைவுக்கு வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை. முன்னரும் ஆட்டுக்குட்டிகளை புலிகளாக மாற்றியதும் நீங்களே, இப்போது ஆட்டுக்குட்டிகளை புலிகளோடு சேர்க்கப் போவதும் உங்களுடைய செயற்பாடுகளே. தமிழினம் சுயநிர்ணய உரிமையைக் கொண்டது. எவ்வகையையான சங்கிலிகளால் பிணைத்தாலும் அவற்றை உடைத்து இலக்கை அடையும் வல்லமை படைத்தது. தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் வரலாறு வழிகாட்டும்….