இந்திய(India) மக்களவை தேர்தலின்முதல் சில சுற்றுக்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பெரும்பான்மைக்கான 272 தொகுதிகளில் பாரதீய ஜனதாக்கட்சி 302 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 208 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
அதேவேளை
தமிழ்நாட்டில்…..
இந்திய (India) மக்களவை தேர்தலின் வாக்கெண்ணிக்கைக்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ் நாட்டில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றியினை பெற்றுள்ளது.
இதற்கமைய, தமிழ் நாட்டின் மொத்த 40 தேர்தல் தொகுதிகளில் 17 தேர்தல் தொகுதிகளில் வெற்றி பெற்று தி.மு.க கூட்டணி முன்னணி வகிக்கின்றது.
இந்நிலையில், தி.மு.க கூட்டணியுடன் போட்டியிட்ட ஏனைய அதிமுக, பாஜக, மற்றும் ஏனைய கட்சிகள் எந்த ஆசனங்களும் இன்றி தோல்வியை தழுவியுள்ளன.