இந்தோனேசியாவில் சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு- 15 பேர் உயிரிழப்பு !

You are currently viewing இந்தோனேசியாவில் சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு- 15 பேர் உயிரிழப்பு !

இந்தோனேசியாவின் சுமத்தரா தீவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.

மேற்கு சுமத்ரா மாகாணத்தின் சோலோக் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியை ஒட்டி கிராம மக்கள் பலர் நேற்று மாலையில் சட்டவிரோதமாக தங்கத் தாதுவை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. சுற்றியுள்ள மலைகளில் இருந்து சேறு சரிந்து விழுந்தது. இதனால், சுரங்கம் தோண்டியவர்கள் சேற்றில் புதைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 15 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்டபோது சுரங்கப்பகுதியில் 25 பேர் இருந்திருக்கலாம் என பேரிடர் மீட்பு படை அலுவலக தலைவர் கூறியிருக்கிறார். ’15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 7 பேரின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது’ என்றும் அவர் கூறி உள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments