இந்தோனேசியாவில் (Indonesia) போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழர்கள் மூவருக்கு மரண தண்டனையை வழங்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசியாவின் கடல் எல்லையில் தமிழர்கள் மூன்று பேர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் (Singapore) கப்பல் துறையில் பணியாற்றி வந்த ராஜு முத்துக்குமரன் (38), செல்வதுரை தினகரன் (34) மற்றும் கோவிந்தசாமி விமல்கந்தன் (45) ஆகிய மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சரக்கு கப்பலில் 106 கிலோ “கிரிஸ்டல் மெத்” போதைப் பொருளை கடத்தியதாக அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தங்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை என மறுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி கப்பலின் கேப்டன் விசாரணைக்கு முன்னிலையாகியுள்ளார்.
இருப்பினும், அவர் நிகழ்நிலை (Online) வாயிலாக குறைந்த நேரமே முன்னிலையாகியதனால் குற்றம் சாட்டப்பட்ட தமிழர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, இந்தோனேசிய சட்டப்படி மூவரும் மரண தண்டனையை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளதாக சிங்கப்பூர் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.