ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுகளில் இருந்து சிங்கள படையினரை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சிங்கள் பேரினவாத அரசாங்கம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
சிங்கள பேரினவாத படைவீரர் ஒருவரின் திருமணநிகழ்வில் கலந்துகொண்டவேளை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இனப்படுகொலையாளி சவேந்திரசில்வா இதனை தெரிவித்துள்ளார். எங்கள் கடமைகளில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் என்ற அடிப்படையில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.மனித உரிமை பேரவையால் சில விடயங்களை செய்ய முடியும் சில விடயங்களை செய்ய முடியாது என்பது உங்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ள சவேந்திரசில்வா மனிதாபிமான நடவடிக்கைகளின் போது நாங்கள் எவ்வளவு செய்துள்ளோம் என்பது எங்களிற்கு தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திக்கொண்டிருந்தவேளை நாங்கள் நாங்கள் மிகவும் பொறுமையுடன் செயற்பட்டோம் அதன் காரணமாகவே எங்களால் உயிரிழப்புகளை தவிர்க்கமுடிந்தது என்று வாயில் வந்தததை பிதற்றியுள்ளார்