போர்க்குற்றவாளியான முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கு எந்த நாடும் அகதி அடைக்கலம் கொடுக்க கூடாது அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் நேற்று மாலை நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு சங்க உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , இலங்கையில் இருந்து தப்பி ஓடிய ஜனாதிபதி கோட்டபாயவிற்கு எந்த நாடும் அகதி அந்தஸ்து கொடுத்து எந்த நாடும் வாழ்வதற்கு இடம்கொடுக்க வேண்டாம்.மக்கள் போராட்டத்தின் ஊடாக ஜனாதிபதி வெளியேற்றப்பட்டதை நாம் வரவேற்கின்றோம்.
எமது உறவுகளை இந்த ஜனாதிபதி பிரதமரிடம் தான் கொடுத்துவிட்டு தொலைத்து விட்டுள்ளோம்.இறுதி யுத்தத்தின் போது எமது உறவுகளை இவர்களிடம் தான் ஒப்படைத்திருந்தோம்.
எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தான் அன்றிலிருந்து இன்று வரை கேட்டு இருக்கின்றோம்.எமது உறவுகளை காணாமல் ஆக்கிய ராஜபக்ஸ குடும்பத்திற்கு எவரும் ஆதரவு அழிக்க வேண்டாம்.
இன்று எமது உறவுகளை காணாமல் ஆக்கிவிட்டு தற்போது அவர்களும் காணாமல் ஆக்கப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமல் நாம் இருக்கின்றோம்.என்றார்.