தமிழினத்தைக் கருவறுத்த இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்ச யாழ் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்று மட்டுவில் பகுதியில் நிகழ்வொன்றில் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் பேரினவாத சிங்கள அசரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மட்டுவில் வண்ணாத்திப்பாலம் பொருளாதார மத்திய நிலையம் முன்பாக போராட்டம் நடத்தியுள்ளார்கள்-
இனப்படுகொலையாளி மகிந்தவின் மகுடிகளால் தொங்கவிடப்பட்டிருந்த மகிந்தவிற்கான விளம்பரங்களை அறுத்தெறிந்து தாய்மார்கள் தங்கள் கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளனர் இப்பொராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கயேந்திரன் அவர்களும் மக்களுக்கு ஆதரவாக கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காணொளி
யாழ்ப்பாணத்தில் மகிந்தாவை எதிர்த்துப்போராடிய மக்கள்! – YouTube