இனப்படுகொலையாளி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உள்ளவர்கள் பலர் அதிலிருந்து வெளியேற ஆரம்பித்துள்னர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கட்டுப்பாட்டின் கீழுள்ள தங்கல்ல நகர சபை தலைவர் டபிள்யூ.பி.ஆரியதாச மற்றும் உறுப்பினர் அரலிய எரந்திம ஆகியோர் இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து போட்டியிடுகின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், திலிப் வெத ஆராச்சி முன்னிலையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த இவ்விருவரும் , தங்கல்ல பிரதேச சபைக்கு அக் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றனர்.
இனப்படுகொலையாளி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பூர்வீக இல்லம் தங்கல்ல நகர சபை பிரதேசத்தில் அமைந்திருக்கின்றது. அதுவே ராஜபக்சக்களின் மினி அரசியல் கோட்டையாகவும் கருதப்படுகின்றது.