இதுவரை காலமும் தாயகப்பாடல்களை பாடாத கனேடிய காங்கிரஸ் மக்களின் எதிர்ப்பை கண்டதும் பாடியதால் விசனம் அடைந்த ஊடகவியலாளர்.
தலைவரின் பாடலை பாடியதால் அரங்கைவிட்டு இறங்கியதாக பதிலளிக்கும் கனேடிய தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்.
மக்களின் எதிர்ப்பு போராட்டத்தினால் பாடலை பாடமுடியாது வெளியேறும் பாடகர் சிறினிவாஸ்
எதிரிகளோடு கைகோர்த்த கனேடிய தமிழ் காங்கிரஸ் நடாத்திய தெரு விழாவிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த தமிழ்மக்கள்
தமிழினப் படுகொலையாளிகளுடன் கைகோ
ர்த்து இமாலயப் பிரகடனம் செய்தவர்களின் தெருவிழாவில் …
களியாட்டமாடி கனடியத் தமிழரை மடைமாற்ற நினைத்தவர்களை எதிர்த்து…
வெளியே இனவுணர்வு கொண்ட தமிழ் மக்கள் எழுச்சியாக முற்றுகைப்போராட்டம் நடத்தியதனால்…
தமிழகப் பாடகர்கள் இடைநிறுத்திப் போக..
தோற்றுப்போன நிலையில் நிகழ்ச்சியின் இறுதியில் வேறு வழியற்றவர்களாக..
“தலைவர் பாடலை” நிறைவில் மக்களை ஈர்க்கப் பாடினர்!
புலி எதிர்ப்பாளர் மேடை நிகழ்ச்சிகளைத் தொகுக்க …
இன ஆதரவுப் பாடல்கள் இரண்டு பாடி மக்களை மயக்க முயன்றனர்!
மக்களோ மாபெரும் எழுச்சியில் திளைத்து தமக்குள் எழுச்சிப் பாடல்கள் ஆடிப்பாடி எதிர்ப்புப் போராட்டத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்தனர்!
இனியாவது எம்மினத்தை அழித்தவரோடு கைகோர்ப்பவரோடு தமிழினம் சேராதிருக்க உறுதி எடுத்துக்கொள்ளட்டும்.
இலங்கைத் தீவில் தமிழ்த் தேசம் அதன் இறைமை தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட தீர்வு எட்டப்பட்டாலன்றி ஈழத்தில் மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் தமிழன் அமைதியாய் இருக்க மாட்டான் என்ற தெளிவான செய்தி சொல்லப்பட்டுள்ளது. டக்ளஸ் அங்கஜன் விஜயகலா திலீபன் கருணா பிள்ளையான் சுமந்திரன் போன்ற கோடரிக்காம்புகளை புதிது புதிதாக உருவாக்கி தமிழ்த் தேசிய உணர்வை கரைத்துவிடலாமென்றும் தமித் தேசத்தை சிங்கள பௌத்த மயமாக்கி கரைத்து விடலாமென்றும் கனவுகாணும் சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கும் அடிவருடிகளுக்கும் தக்கபாடம் புகட்டப்பட்டுள்ளது.
இன்னும் இனமானத்தை துறந்து எதிரிகளோடும் உதிரிகளோடும் கைகோர்க்கும் ஈனத்தமிழருக்கு மக்கள் தொடர்ந்து புகட்டபோகும் பாடம் இதுதான் என்பதை கனடா வாழ் ஈழத்தமிழர் உணர்த்தியுள்ளனர்.