இன்றிரவு முதல் இலங்கையில் மகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு தடை!

You are currently viewing இன்றிரவு முதல் இலங்கையில் மகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு தடை!

சிறீலங்காவில் கொரோனாத் தொற்று பாதிப்பு நிலை சடுதியாக அதிகரித்துள்ளதை அடுத்து மாகாணங்களுக்கு இடையே விதிக்கப்பட்டிருக்கும் பயணக்கட்டுபாடு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரம்பலை கட்டுப்படுத்தும் வகையில், எதிர்வரும் 30 ஆம்திகதிவரை மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று(10) உத்தரவிட்டிருந்தார்.

இதேவேளை

அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக மாகாணங்களுக்கு இடையேயான பயணக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாகாணங்களுக்குள் மாத்திரம் தொடருந்து சேவைகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்குள் மாத்திரம் தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தொடரூந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

தொடருந்து சேவைகள் இயக்கப்படும் முறை தொடர்பில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ள நிலையில் பெரும்பாலும், நாளை (மே-12) முதல் இவ்வாறு மாகாணங்களுக்குள் மாத்திரம் தொடருந்து சேவைகள் இயக்கப்படலாம் என தொடருந்து திணைக்கள பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அதேபோன்று

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் போக்குவரத்து பேருந்து சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (11) நள்ளிரவு முதல் குறித்த நடவடிக்கை நடைமுறைக்கு வரும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே இலங்கை போக்குவரத்து சபையின் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவையும் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply