சிறீலங்காவில் மீண்டும் கொரோனாத் தொற்று பரம்பல் அதிகரித்துள்ள நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் 500 இற்கு மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இன்று (ஏப்-22) இதுவரை 520 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதையடுத்து இலங்கையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 98 ஆயிரத்து 570 ஆக அதிகரித்துள்ளது.