கடுமையான கொரோனா தொற்றுக் காரணமாக பூட்டப்பட்டிருந்த நோர்வே-சுவீடன் எல்லைகள் கடந்த 3 கிழமையாக தனிமைப்படுத்தலின்றி போய்வரலாம் என சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.
ஆனாலும் இப்போது மீண்டும் இருநாடுகளிலும் தொற்று அதிகரித்துள்ளதால் கொரோனா தொற்றை குறைப்பதற்கான விதிமுறைகள் இறுக்கப்பட்டுவருகின்ற நிலையில் இன்று இரவு 12 மணியோடு எல்லைகளை கடப்போர் தனிமைப்படுத்தல் சட்டத்தினை எதிர்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இறுக்கம் எவ்வளவு நாளைக்கு தொடரும் என தெரியாதுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.