தாயகத்தில் இடம்பெற்ற இனஅழிப்பிற்கு நீதிகேட்டு உலகெங்கும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் இன்றைய சூழ்நிலையில் தமிழின அழிப்பிற்கான நீதியினைப் பெற ஜக்கிய நாடுகள் அவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திடம் நீதிவிசாரணையை ஒப்படைப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தியும் ஜெனிவா பேரணிக்கு வலுச்சேர்க்குமுகமாகவும் நெதர்லாந்து குற்றவியல் நீதிமன்றின் முன்பாக 08.02.2020 திங்கள் ஜெனிவா நோக்கிய ஈருருளிப்பயணமும் கவனஈர்ப்பு ஒன்றுகூடலும் ஓழுங்கமைக்கப்பட்டு இனிதே நடைபெற்றது.
சுமார் 9.45 மணியளவில் குற்றவியல் நீதிமன்றின் முன்பாக அகவணக்கத்துடன் ஈருருளிப்பயணம் ஆரம்பிக்கப்பட்டு பெல்ஜியம் ஜரோப்பிய ஒன்றிய வெளிவிவகார ஆணையமுன்றலை நோக்கி பயணப்படுகின்றது. கடுங்குளிரிலும் எமது மக்களுக்கான நீதி வேண்டி எம் தமிழ் இன உணர்வாளர்கள் இந்த கடும் ஈருருளிப் பயணத்தை மேற்கொள்வதும் நெதர்லாந்தில் இருந்து அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக இருவர் இணைந்து பயணிப்பதும் எம் தமிழ் இனத்தின் அவலத்திற்கு வெகு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை ஏற்படுத்துகின்றது என்று இந்தக் கடுங்குளிரிலும் கலந்துகொண்ட மக்கள் உரைத்தவாறு அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி வாழ்த்துக்கள் தெரிவித்துச் சென்றார்கள்.
இந்த ஈருருளிப் பயணமானது 10.02.2020 புதன் ஜரோப்பிய ஒன்றிய வெளிவிவகார ஆணையமுன்றலில் கவனஈர்ப்பு ஒன்றுகூடலில் கலந்து கொண்டபின் தொடர்ந்தும் பயணிக்கும் ஈருருளிப் பயணம் ஜெனீவா முன்றல்வரை பயணிக்க இருக்கின்றது.