இன்று நோர்வேயில் முன்னெடுக்கப்பட்ட கரிநாள் போராட்டம்!

You are currently viewing இன்று நோர்வேயில் முன்னெடுக்கப்பட்ட கரிநாள் போராட்டம்!

ஒஸ்லோ மத்திய தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட கரிநாள் போராட்டம் நோர்வே பாராளுமன்றத்தை சென்றடைந்து அங்கு சிறீலங்காவின் விடுதலைநாள் தமிழ்மக்களுக்கு கரிநாள் என மீண்டுமொருமுறை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் பங்கெடுத்த மக்கள் தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய பதாகைகள் மற்றும் சிறீலங்காவால் தொடரும் அடக்குமறைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அத்தோடு பிரித்தானிய 04.02.1948 இல் நிகழ்திய வரலாற்றுப்பிழையையும் அதனைத் தொடர்ந்து சிங்கள அரசு திட்டமிட்டு மேற்கொண்டுவரும் தமிழின அழிப்பினையும் விளிப்பூட்டும் நீதிக்கான மனுவும் பிருத்தானியா தூதரகத்திற்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அரசியல் பிரிவால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இன்று நோர்வேயில் முன்னெடுக்கப்பட்ட கரிநாள் போராட்டம்! 1

இன்று நோர்வேயில் முன்னெடுக்கப்பட்ட கரிநாள் போராட்டம்! 2

பகிர்ந்துகொள்ள

Leave a Reply