இன்று நோர்வேயில் திருமிகு கயேந்திரகுமாரின் காலத்தின் பதிவு நூல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
நூலை முழுமையாக படிக்க இங்கே அழுத்துங்கள் Gajenthirakumar Final 1
இந்நூல் வெளியீடானது தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வெளியீடு செய்யப்பட்டிருந்தது, வரலாறுதான் வழிகாட்டி என்ற தேசியத்தலைவரின் சிந்தனைக்கமைய கடந்த 4 வருடங்களாக தமிழ் மக்களின் அரசியல் வேணவாவை சிறீலங்காவின் பாராளுமன்றத்தில் தனது உரைகளுக்கூடாக பதிவு செய்த திருமிகு கயேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தமிழ் மக்களின் விடுதலை அரசியலுக்கான வரலாற்றுப்பதிவாக அமைகின்றது.
எமது மண்ணை ஆக்கிரமித்து தமிழினத்தின் வரலாற்றுச்சான்றுகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் அழித்து வரும் சிறீலங்காவின் பாராளுமன்றத்தின் குகையுக்குள் நுழைந்து எமக்கு சிறீலங்காவால் இழைக்கப்பட்ட அநீதிகளை பதிவாக்கிய ஒவ்வொரு உரைகளும் அடுத்த சந்ததிகள் படிக்கும் ஆவணமாக்கப்படவேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.