இன்று பத்திரிகை சுதந்திர நாள், கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இதுவரை நீதி இல்லை!!

You are currently viewing இன்று பத்திரிகை சுதந்திர நாள், கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இதுவரை நீதி இல்லை!!

இன்று பத்திரிகை சுதந்திர நாள். உலகம் முழுவதிலும் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் பத்திரிகையாளர்கள் சுதந்திரத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், வெறும் பேச்சளவில் மட்டும் பத்திரிகை சுதந்திரம் என்ற பதம் பயன்பாட்டில் உள்ளது. 

பத்திரிகைச் சுதந்திரம் பேச்சளவில்

தமிழர் தாயகத்தில் கடந்த யுத்த காலம் தொடக்கம் இன்றுவரை பத்திரிகை சுதந்திரம் என்பது பேச்சளவில் மாத்திரமே இருக்கின்றது. யுத்த காலத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு இன்றுவரை நீதி வழங்கப்படவில்லை. அவர்களின் படுகொலைகள் தொடர்பாக விசாரணைகள் கூட நடத்தப்படவில்லை. 

b

படைத்தரப்பால் ஊடகவியலாளர்கள் கண்காணிப்பு

தமிழர் தாயகத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் இன்றும் படைத்தரப்பினரால்  கண்காணிக்கப்படுவதுடன் அவர்களுக்காகப் பணியாற்றவும்  நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அத்துடன் கோத்தபாய அரசாங்க அதிகார வர்க்கத்தின் அநீதியைக் வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். அவர்கள் பொலிஸ் விசாரணை ஊடாகவும் இனந்தெரியாத நபர்களின் மூலமும் அச்சுறுத்தப்படுகின்றனர்.

பெரும்பான்மையின ஊடகவியலாளர்களின் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திய சிறிலங்கா அரசு, இதுவரை தமிழ் ஊடகவியலாளர்களின்; படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான  விசாரணையை ஆரம்பிக்கவில்லை.

35 தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை

சிறிலங்காவில் இதுவரையில் 43 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 35 தமிழ் ஊடகவியலாளர்களும் 05 பெரும்பான்மையின ஊடகவியலாளர்களும் 03 முஸ்லிம் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.

nn

1985 ஆம் ஆண்டு தொடங்கிய தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் 2010 ஆம் ஆண்டுவரை தொடர்ந்தவண்ணமே இருந்தது.  அரசாங்கமானது இதுவரையில் சிறுபான்மையின ஊடகவியலாளர்களின் படுகொலை  தொடர்பான விசாரணையில் அக்கறை செலுத்தியதாக தெரியவில்லை.

ஐ.நா.வினால் பிரகடனம்

ஐக்கிய நாடுகள் சபையால் 2020 ஆம் ஆண்டிற்கான தொனிப்பொருளாக பத்திரிகைகள் பக்கசார்பின்றியும் யாருக்கும் அஞ்சாத வகையில் செயற்படுதல் வேண்டும். உலக பத்திரிகை சுதந்திர நாள் என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் மனித உரிமைகள் சாசனம் பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

n

பத்திரிகை சுதந்திர சாசனம்

ஆபிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே பத்திரிகை சுதந்திர சாசனம் முன்வைக்கப்பட்டது. இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.

பத்திரிகைகளின் பிரதான பணி என்பது செய்திகளை அல்லது செய்திக் கட்டுரைகளை சேகரித்தல், எழுதுதல், தொகுத்தல், வெளியிடுதல் என்பவற்றை உள்ளடக்கியதாகும்.
 
யுனெஸ்கோ விருது

இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர பரிசு வழங்கிக் கௌரவிக்கின்றனர்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்

இவ்விருது கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா (புரடைடநசஅழ ஊயழெ ஐளயணய) என்பவரின் நினைவாக வழங்கப்பட்டு வருகிறது. இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றது.

நான்காவது தூண்

ஜனநாயகத்தின் 4 பிரதான தூண்கள் என்று சொல்லப்படுபவற்றில் நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, ஊடகங்கள் என 4ஆவது இடத்தில் ஊடகங்கள் வருகின்ற போதிலும், அதற்கு மேலுள்ள 3 தூண்களும் சரியாகச் செயற்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து, மக்களுக்கு அறிவிக்கும் முக்கியமான பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. 

ஊடகங்கள் என்று வரும்பொழுது வழக்கமான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் போன்ற ஊடங்களைத் தாண்டி இணைய செய்தித் தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் பகிரப்படும் தகவல்களும் ஊடகங்கள் என்ற வகைக்குள்ளேயே அடங்குகின்றன.

சிறிலங்கா 127 ஆவது இடம்; நோர்வே முதலிடம்

பத்திரிகைச் சுதந்திரம் உள்ள உலக நாடுகளின் தரப்படுத்தல் வரிசையில் சிறிலங்காவுக்கு இவ்வருடம் 127 ஆவது இடமும், கடந்த வருடம்  126 ஆவது இடமும் 2018 இல் 131  ஆவது இடமும் வழங்கப்பட்டுள்ளது.

2020 இல் ஊடக சுதந்திரம் உச்ச அளவில் உள்ள நாடாக நோர்வே தெரிவாகியுள்ளது. கடைசி இடமான 180 ஆவது இடத்துக்கு வட கொரியா தெரிவாகியுள்ளது.

அத்துடன் பல வருடங்களாக நோர்வே, பின்லான்ட், சுவீடன், நெதர்லாந்து ஆகிய நாடுகள் மாறி மாறி முதல் 3 இடங்களை பிடித்து வருவதோடு, கடந்த 4 வருங்களாக நோர்வே முதலிடத்தில் இருந்து வருகிறது.

n

சிறிலங்கா கடந்த 2015ஆம் ஆண்டு 165 ஆவது இடத்தில் காணப்பட்டது.

2015 – 165
2016 – 141
2017 – 141
2018 – 131
2019 – 126
2020 – 127

2015 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டில் 24 இடங்கள் முன்னேறி 141 ஆவது இடத்திலிந்த சிறிலங்கா 2016 இலிருந்து 2017 இற்கு எந்தவித முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தவில்லை. 

எனினும் 2018 இல் 131 ஆவது இடத்தினையும் 2019 ஆம் ஆண்டு 126வது இடத்தை பெற்றிருந்தது. 2020ம் ஆண்டு தரப்படுத்தலில் சிறிலங்கா 180 நாடுகள் பட்டியலில் 127ஆம் இடத்தை பெற்றுள்ளது.

உலகின் பல நாடுகளிலே சமூக உறுதிப்பாட்டையும் விட பத்திரிகைச் சுதந்திரம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. பத்திரிகைகளின் பணி மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். 

சுதந்திரமாக கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும் சுதந்திரமாகப் பத்திரிகைகளை வெளியிடுவதற்கும் செய்திகளைச் சதந்திரமாக அடைவதற்கும் உலகிற்கு வாய்க்கப் பெற்ற ஒரு உரிமையைப் பாதுகாப்பதற்காகத் தங்களது உயிர்களைத் தியாகம் செய்தவர்களையும் நினைவுகூரும் தருணமாக இன்றைய தினம் அமைகிறது.

இலங்கை பத்திரிகைப் பேரவை

1973 ஆண்டு இலங்கை பத்திரிகைப் பேரவை ஆரம்பிக்கப்பட்டதுடன் பத்திரிகை பதிவு செய்தல்முக்கிய விடயமாக அமைந்துள்ளதுடன் பத்திரிகைகளின் சுதந்திரமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள போதிலும் தமிழ் ஊடகவியலாளர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டவண்ணம் இருக்கின்றனர். 

பத்திரிகை பதிவு தொடர்பில் முறையான அரசநிறுவனம் இல்லாததினாலும், உயர்தொழில் நியமனங்களுக்கு அணுகூலமாக இலங்கைப் பத்திரிகைகளின் நல்லொழுக்கங்களை பாதுகாப்பதற்கும், இழிவான, தகுதியற்றபத்திரிகைகளை இல்லாதொழிப்பதற்கும் பத்திரிகை பதிவும் நடைபெறுகின்றது.

பத்திரிகை ஊடகச் சுதந்திரம் என்பது ஊடகங்கள் மிரட்டலும் தணிக்கையும் இல்லாமல் தகவலை வெளியிடுவதற்கான சுதந்திரம் ஆகும். ஊடகம் சமூகத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. வௌ;வேறு நாடுகளில் ஊடகச் சுதந்திரம் வௌ;வேறு நிலைகளில் உள்ளது. 

நோர்வே, கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஊடகங்கள் மிகச் சுதந்திரமாக இயங்குகின்றன. சீனா, ஈரான், வட கொரியா, கியூபா, சிறிலங்கா ஆகிய நாடுகளில் ஊடகங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் படுகொலை  செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என இந்த நாளில் கோரிக்கை விடுக்கப்படுகின்றது. 

இன்று பத்திரிகை சுதந்திர நாள், கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இதுவரை நீதி இல்லை!! 1
பகிர்ந்துகொள்ள