இன்று நோர்வே மக்களின் உதவியுடன் நோர்வே ஒற்றுமை அபிவிருத்தி குமுகத்தின் ஊடாக போக்கறப்பு கிராம அலுவலர் பிரிவில் 38 பேருக்கும் வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவில் 32 பேருக்கும் மற்றும் முசலி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அரிப்பு மேற்கு, அரிப்பு கிழக்கு கிராமங்களில் வாழும் 50 குடும்பங்களுக்கும் உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த உதவியானது பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கும் வறுமைக்கோட்டுக்குள் வாழும் எமது சொந்தங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளை ஆழியவளை கிராம அலுவலர் பகுதி மக்களுக்கும் உடுத்துறை கிராம அலுவலர் பகுதி மக்களுக்கும் உதவிகள் வழங்கப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.








