ஈழத்தமிழினம் தனது பூர்வீகத்தாயகத்தில் விடுதலைவேண்டி நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தை நடத்தி சுதந்திர தமிழீழத்தை பிரகடனம் செய்யும் புறநிலையில்தான் உலகின் பல்வேறு நாடுகளும் சிங்களதேசத்திற்கு முண்டுகொடுத்து எமது விடுதலைப்போராட்டத்தைச் சிதைத்தழித்தன. ஈழவிடுதலைப்போராட்டத்தினை இன்றுவரை பயங்கரவாதமாகச் சித்தரித்துக் கொச்சைப்படுத்திவருகின்றன.
எமது இனம் எதிர்கொண்ட இன அழிப்பு, தற்போதும் நடைபெற்றுவரும் தொடர் இன அழிப்புப் போன்றவற்றையும் எமது தரப்பின் அபிலாசைகளையும் நோர்வேஜிய மக்களுக்கு தொடரச்சியாக எடுத்தியம்பி வரும் ஆண்டிதழே நோட்டமாகும்.
இவ்விதழ் 2009 இன் பின்னர் சில ஆண்டுகள் தடைப்பட்டிருந்தபோதும் மீண்டும் எமது இரண்டாம் தலைமுறை இளையவர்களின் அரசியல், பண்பாட்டு, சமூகவிஞ்ஞானப் பார்வைகளையும் உள்ளடக்கி இவ்வாண்டும் வழமைபோல் உழைப்பாளர் தினத்தில் உங்கள் பார்வைக்கு வருகின்றது.
அன்பான உறவுகளே மேலும் இப்படியான படைப்புகளை உருவாக்குவதற்கு உங்கள் பங்களிப்பு பேருதவியாக இருக்கும் அந்தவகையில் உங்களால் முடிந்தால் பண உதவியை செலுத்துவதோடு நோர்வேயிய மக்களுக்கும் இச்சஞ்சிகை சென்றடையக்கூடிய வகையில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
vipps 602172 புலர்வின் பூபாளம்



































