வெடுக்குநாறியில் அமைந்துள்ள ஆதிசிவன் கோயிலில் சிவன் இராத்திரிப்பூசையில் கலந்து கொண்ட மக்களில் 8பேரை சிறிலங்கா பொலிசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யாது தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்துவரும் நிலையில் , கைது செய்யப்பட்டவர்கள் உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.ஆனால் சிறைச்சாலையில் அப்படி உணவுத்தவிர்ப்புப் போராட்டம் நடைபெறவில்லை என உண்மைக்குப் புறம்பாக அரசாங்கம் தகவல்களை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று vavuniya நகரில் மாபெரும் மக்கள் போராட்டம் நடைபெற்றுள்ளது.
மதவழிபாடுகள் கூட மறுக்கப்படும் நிலையில் உணர்வெழுச்சியோடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்திற்கு வலிச்சேர்க்கும் முகமாக யாழ்ப்பாணம் நல்லூரிலிருந்து ஊர்ப்பவனி வ்வுனியா நோக்கி வந்து கைது செய்யப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி பேரெழுச்சியோடு இப்போராட்டம் நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
இன்று vavuniya நகரில் மாபெரும் மக்கள் போராட்டம் நடைபெற்றுள்ளது.
