கடற்கரும்புலி மேஜர் காந்தன், கடற்கரும்புலி கப்டன் வாகைசூடி வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழக் கடற்பரப்பில் 29.03.2001 அன்று தவறுதலாக ஏற்பட்ட வெடிவிபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் காந்தன், கடற்கரும்புலி கப்டன் வாகைசூடி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
வீரத்தின் பெயர் நீயானாய் கப்டன் துரியோதனன்
எமக்காய் ஒர் ஈழம் காண தலைவன் வழிசென்று
விடுதலை வேட்கைத் தீயினில் நீ
உலகே வியந்து போற்றும் மனுடமே நிமிர்ந்து பார்க்கும்
போர்க்கெல்லாம் ஒரு பெரும் சமர் அன்று அங்கு நீ
ஆனையிறவில் 29 03 2000ஆம் ஆண்டில் சமர்க்களம்
அன்று வித்திடடோம் உன்னை இன்றுவரை
புலிக்கொடி காண்கினில் உன்முகம் காண்கிறோம்
விடிய இரவுகள் பல உமைக்காய் விடிந்த
பணியாப் பகை படிந்தது உம்வீரத்தின் முன்னே
20 ஆண்டுகள் கழிந்தும் உம் வீர நினைவுகள்
எம்மனக்கண்ணில் உம்முருவம் என்னென்றும் அழியா
நினைவு
அம்மா அப்பா உடன்பிறப்புக்கள்
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”