மட்டக்களப்பு, பாலையடி வெட்டையில்; முன்னேறிவந்து நிலை கொண்டுள்ள படையினரைத் தாக்க புலிகள் திட்டமிட்டனர்.
கடைசி வேவு பார்த்து, இராணுவத்தின் பலம் – பலவீனத்தை அறிந்துவர, தளபதி றீகன் இன்னுமொரு போராளியையும் கூட்டிக்கொண்டு ஸ்தலத்திற்குச் செல்கிறான்.
இடைவழியில், இன்னொரு இராணுவ அணியை எதிர்பாராதவிதமாக எதிர்கொள்ள நேரிடுகிறது.
மோதல் வெடித்தது – றீகனுக்கு குண்டடிபடுகிறது.
இவர்கள் இருவர்; எதிரியோ கும்பலாக இருந்தான். இயலுமானவரை பின்னால் வந்தார்கள். இரத்தம் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு அளவுக்குமேல் றீகனால் நகர முடியவில்லை.
கூடப்போன போராளியால், தளபதியை நீண்டதூரம் தூக்கிக்கொண்டு தப்பி ஓட முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டான்.
றீகன் சொன்னான்; “இனி என்னால வர ஏலாது. நீயும் நிண்டால் சாக நேரிடலாம். ஆயுதங்களும் பிடிபட்டுவிடும்; என்னை விட்டிட்டு, எல்லாத்தையும் கொண்டு நீ ஓடு.”
‘மட்டக்களப்பின் போராட்ட வரலாற்றில் ஒரு தனி அத்தியாயம்; அந்தப் பிராந்தியத்தின் இரண்டாவது தளபதி. தன்னந்தனியனாகச் செத்துக்கொண்டிருக்க, எப்படி இடை நடுவில் அநாதரவாக விட்டுவிட்டுச் செல்லலாம்……?’ அந்தப் போராளி உறைந்து போய் நின்றான்.
ஆனாலும் வேறு வழி எதுவுமே அற்ற நிலை.
தன்னிடமிருந்த எம் 16 கிரனைட் லோஞ்சரையும், இடுப்பில் கட்டியிருந்த பிஸ்டலையும் கழற்றிக்கொடுத்து – சிறப்புத் தளபதியிடம் சொல்ல வேண்டிய சில இரகசியத் தகவல்களையும் காதோடு சொல்லிவிட்டு, குப்பியைத் தன் வாயில் செருகிக்கொண்டே, “போட்டு வா” என்று வழியனுப்பிவைத்தான் அத்தளபதி.
விதைக்கப்பட்டது வீரமும்தான் தொகுப்பிலிருந்து…
விடுதலைப்புலிகள் இதழ் (கார்த்திகை 1993).
கடற்கரும்புலி மேஜர் தங்கம், கடற்கரும்புலி மேஜர் செந்தாளன், கடற்கரும்புலி கப்டன் தமிழினி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
16.07.1995 அன்று யாழ். மாவட்டம் காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவி சிறிலங்கா கடற்படையினரின் P 715 “எடித்தாரா” கட்டளைக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் தங்கம், கடற்கரும்புலி மேஜர் செந்தாளன் / நியூட்டன், கடற்கரும்புலி கப்டன் தமிழினி மற்றும் கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப். கேணல் நரேஸ் / சந்திரன், கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி லெப். கேணல் மாதவி உட்பட ஏனைய மாவீரர்களின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
கடற்புலிகளின் மூன்று படையணிகள் உள்ளடக்கிய அணி காங்கேசன்துறை துறைமுகத்தினுள் அதிகாலை 1.00 மணிக்கு ஊடுருவி குடா நாட்டுப் படைகளுக்கு ஆயுத தளபாடம் விநியோக மையமாக இருந்த காங்கேசன்துறை கடற்படை தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்டதில் சிறிலங்கா அரசுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தி வரலாற்று சரித்திர களமாகியது அன்றைய சமர்.
ஐந்து மணி நேர கடும் சமரில் கடற்கரும்புலி மேஜர் தங்கம், கடற்கரும்புலி மேஜர் செந்தாளன், கடற்கரும்புலி கப்டன் தமிழினி ஆகிய கடற்கரும்புலிகள் தமது இன்னுயிர்களை ஈர்ந்து கடலன்னை மடியில் வீரகாவியமாகினர்.
பூநகரிச் சமரின்போது நாகதேவன்துறையில் கைப்பற்றிய விசைப்படகு ஒன்றும் மூழ்கிப்போனதால் கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப். கேணல் நரேஸ், கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி லெப். கேணல் மாதவி உட்பட 11 கடற்புலிப் போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதம்.!
இவர்களுடன் விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.!
கடற்புலி கப்டன் வில்வன் (ஏரம்பமுர்த்தி ஜீவானந்தன் – பெரியபோரதிவு, மட்டக்களப்பு)
கடற்புலி கப்டன் கமலம் (குழந்தைவேல் சிறரஞ்சினி – காரைநகர், யாழ்ப்பாணம்)
கடற்புலி கப்டன் தாயகி (மகாலிங்கம் ரஞ்சினிதேவி – யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப்டினன்ட் பூமதி (கனகரட்ணம் சாந்தனி – வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப்டினன்ட் தவமலர் (துரைசிங்கம் கேமாவதி – மானிப்பாய், யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப்டினன்ட் சோபிதா (தர்மலிங்கம் மாலதி – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)
கடற்புலி 2ம் லெப்டினன்ட் நித்தியா (மாரிமுத்து மஞ்சுளா – மாங்குளம், முல்லைத்தீவு)
கடற்புலி 2ம் லெப்டினன்ட் அருள்மதி (வெற்றிவேலாயுதம் விஜந்திரராணி – யாழ்ப்பாணம்)
கடற்புலி 2ம் லெப்டினன்ட் நதியரசி (செல்வராசா சாந்தவதனி – முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு)
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”