இன்றைய விடுதலை தீபங்கள்!

You are currently viewing இன்றைய விடுதலை தீபங்கள்!

மட்டு – அம்மாறை மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் நீலன் வீரவணக்க நாள் இன்றாகும். தென் தமிழீழத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில்   ஒட்டுக்குழு கருணாவின் துரோகத்தனத்தால் துரோகிகள் மேற்கொண்ட தீய செயல்களால் 12.04.2004 அன்று துரோகி கருணாவால் சுட்டபட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் நீலன் உட்பட ஏனைய போராளிகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

இன்றைய விடுதலை தீபங்கள்! 1

தமிழீழ விடுதலை போராட்டத்தின் கறுப்பு பங்கங்களில் முதல் பக்கமாக பெயர் கூட குறிப்பிட முடியாத துரோகங்கள் சில நிறைந்துள்ளன.

இந்த துரோகக் கும்பலின் சதியில் சிக்குண்டு கடந்த 12.4.2004 அன்று படுகொலை செய்யப்பட்டவர் லெப்டினன்ட் கேணல் நீலன் ஆவார். சீனித்தம்பி சோமநாதன் எனும் இயற்பெயரையும் மட்டக்களப்பு ஆரையம்பதியை சொந்த இடமாகவும் கொண்டவர். தமிழ் தேசியத்தின் பால் அவர் கொண்டிருந்த ஈர்ப்பும் தலமையின் மேல் அவர் கொண்டிருந்த அழியாததும் அசைக்க முடியாததுமான விசுவாசம் அவர் மட்டக்களப்பில் வீரச்சாவடைந்தபோதும் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் அவரது வித்துடலை விதைக்கவைத்தது. 

இன்றைய நாள் லெப்டினனட் கேணல் நீலன் அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து வீரவணக்கத்தை செலுத்தும் ஒரு நாள் ஆகும். தமிழீழ தேசியத்தையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் நேசிக்கின்ற அனைவரும் இன்றை நாளில் நீலன் அவர்களுக்கு வணக்கத்தை செலுத்துகின்றோம். விடுதலைப்போராட்டத்திற்கும் தமிழினத்திற்கும் அவமானத்தை தேடித்தந்த மாபெரும் அழுக்காக, மறையாத கறையாக, களையாக, இருந்து வரும் சிலர் தங்கள் வரலாற்று தவறுகளையும் தங்களின் குற்றங்களையும் கழுவ மாவீரர்களின் குருதியை பாவித்தமை என்றும் அழியாத சுவடு ஆகும் 

இன்றைய விடுதலை தீபங்கள்! 2

அவ்வாறான ஆயுதத்தின் வெந்தணலில் அகப்பட்டவர் லெப்டினன்ட் கேணல் நீலன் அவர்கள். அவர் மட்டும் அல்லாமல் வேறு பல போராளிகளும் இந்த சுழியில் அகப்பட்டுக்கொண்டார்கள்.

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஏனைய போராளிகளுக்கும் இன்றைய தினத்தில் நாம் வீரவணக்கத்தை செலுத்துகின்றோம். இவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றனர் என்றென்றும் மாவீரர்கள் தியாகம் நிலைத்திருக்கும். தாயகம் மலரும். கனவு நனவாகும் விசேட அணி தமிழீழ விடுதலைப்புலிகள் புலிகளின் முக்கியஸ்தர் நீலனின் படுகொலையில் துலங்கும் உண்மைகள். 01.03.2004 அன்றிலிருந்து கருணாவால் தடுத்துவைக்கப்ட்டிருந்த லெப்.கேணல் நீலன் அவர்களை கருணா தப்பி ஓடும்வேளை கருணாவின் மருதம் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சுடப்பட்டுள்ளார் எனவும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமையான பணிகளில் ஈடுபட்டிருந்த புலனாய்வுத்துறைப் போராளிகள் பிரத்தியேகமான சந்திப்புக்கென 01.03.2004 அன்று மீனகம் முகாமிற்கு கருணாவிடம் அழைக்கப்பட்டிருந்தனர். 

மீனகம் முகாமிற்கு கருணாவால் அழைக்கப்பட்ட மேற்படி போராளிகள் நேரடியாக விசாரிக்கப்பட்டிருந்ததுடன் நீலன் அவர்கள் 01.03.04 அன்றிலிருந்தே சக போராளிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டதுடன் அவர் விலங்கிடப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இன்றைய விடுதலை தீபங்கள்! 3

12.04.04 அன்று காலை துரோகி கருணா தப்பி ஓடுவதற்கு முன்பாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நீலன் அவர்களை தான் தங்கியிருந்த மருதம் முகாமிற்கு கொண்டு வரும்படி கூறியுள்ளார். அங்கு அவரைச் சுட்டு விட்டே கருணா தப்பியோடியுள்ளான். அதன் பின்னர் 13.04.04 அன்று மருதம் முகாமில் தேடுதலை மேற்கொண்ட போது நீலன் அவர்களின் வித்துடல் கண்கள் துணியினால் கட்டப்பட்ட நிலையிலும் கைகள் விலங்கிடப்பட்ட நிலையிலும் கண்டு எடுக்கப்பட்டது.

########################################

கடற்கரும்புலி கப்டன் வீரமணி வீரவணக்க நாள் இன்றாகும்.

மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் 12.04.2000 அன்று சிறிலங்கா கடற்படையினரின் நீருந்து விசைப்படகு மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் வீரமணி ஆகிய கடற்கரும்புலி மாவீரரின்  20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

இன்றைய விடுதலை தீபங்கள்! 4

##########################################################

சிறீலங்கா தலைநகர் கொழும்புத் துறைமுகத்தில் 12.04.1996 அன்று ஊடுருவி சிறிலங்கா கடற்படையினரின் மூன்று சரக்குக் கப்பல், கடற்படைப் படகுகள், துறைமுகக் கட்டிடத் தொகுதி மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் ரதீஸ், கடற்கரும்புலி மேஜர் ரதன், கடற்கரும்புலி மேஜர் ஜனார்த்தனன், கடற்கரும்புலி மேஜர் ரவாஸ், கடற்கரும்புலி மேஜர் பரன், கடற்கரும்புலி மேஜர் பொய்யாமொழி, கடற்கரும்புலி கப்டன் சுபாஸ், கடற்கரும்புலி கப்டன் விக்கி, கடற்கரும்புலி கப்டன் மதனி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.இன்றைய விடுதலை தீபங்கள்! 5இன்றைய விடுதலை தீபங்கள்! 6இன்றைய விடுதலை தீபங்கள்! 7இன்றைய விடுதலை தீபங்கள்! 8இன்றைய விடுதலை தீபங்கள்! 9இன்றைய விடுதலை தீபங்கள்! 10இன்றைய விடுதலை தீபங்கள்! 11இன்றைய விடுதலை தீபங்கள்! 12இன்றைய விடுதலை தீபங்கள்! 13
 
 
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
பகிர்ந்துகொள்ள