லெப். கேணல் நிர்மா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
“ஓயாத அலைகள் 03” தொடர் நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்படட ஆனையிறவை மீண்டும் கைப்பற்றும் நோக்குடன் சிறிலங்கா படையினர் தொடுத்த “தீச்சுவாலை” (அக்னிகீல) இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் 28.04.2001 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் நிர்மா, லெப்டினன்ட் செம்பிறை, லெப்டினன்ட் தமிழினி, லெப்டினன்ட் இசைப்பிரியா உட்பட ஏனைய மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
” தீச்சுவாலை முறியடிப்புச் சமரின் வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.”
லெப். கேணல் நிர்மா (ஞானாந்தன் மேரிசாந்தினி – கனகபுரம், கிளிநொச்சி)
லெப்டினன்ட் தமிழினி (தியாகராசா விஜயலட்சுமி – மாமுனை, செம்பியன்பற்று, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் செம்பிறை (நாராயணசாமி வசந்தராணி – உடையார்கட்டு, முல்லைத்தீவு)
லெப்டினன்ட் இசைப்பிரியா (பஞ்சாட்சரம் வேணுகா – ஓட்டு மடம், யாழ்ப்பாணம்)
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”