தமிழீழத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்!
களப்படப்பிடிப்பாளர் வீரவேங்கை கிளிமொழி
சடாச்சரம் செல்வலட்சுமி
மாதகல் – யாழ்ப்பாணம்
பிறப்பு : 03.09.1981 – வீரச்சாவு : 02.04.2000
கிளிமொழி …..!
சுடுகருவி தாங்கிய வீரர்களோடு
சுடமுடியாத கருவி கொண்டு
களமுனையெங்கும் உலாவந்தாள்.
களப்புலிகள் வீரத்தைக்
புகைப்படக்கருவிகுள் சிறைப்பிடிக்க
நெருப்பு மழைக்குள்ளும்
நிமிர்தியவள் நின்றாள்.
இவள் சிந்தனைத் தூரிகைகள்
வரைந்த அந்த ஒளிஓவியங்கள்
உலகத் திசையெங்கும் தாயக
வீரத்தை முரசறைந்து
கொண்டிருக்கும்.
வேதனையின் வாடுகின்ற உறவுகளின்
கோலங்களை வெளியுலகெங்கும்
வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்.
பொய்தனைப் பரப்பும் பகைவனின்
செய்தியைப் பொய்களாக்கும்.
வரிப்புலிகள் சேனைக்குள்
கலைப்புலியாய் இவள் மிளிர்ந்தாள்
களம் நடுவே புகைப்படக்கருவியுடன் இவள் மடிந்தாள்.
வரலாற்றைப் பதியும்வேளை
வரலாறாய் வீழ்ந்தவளே…..
நீ பதித்த காலப் பதிவுகள் போல்
என்றும் நீ வாழ்வாய் – எம்மோடு.
எங்கள் நெஞ்சில் உந்தன் தாகம்
உந்தன் சுவட்டில் உந்தன் பாதம்.
————————————————————————————————————-
லெப். கேணல் அசோக் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.
02.04.2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் முகாவில் பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ தொடர் நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் அரசி / இதயா, மேஜர் லக்சனா, லெப்டினன்ட் மணிநிலா, 2ம் லெப்டினன்ட் கிளிமொழியாள், வீரவேங்கை கலைமகள், வீரவேங்கை பூங்கொடி, வீரவேங்கை தமிழிசை / மதுரா ஆகிய வேங்கைகளின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.
02.04.2000 அன்று “ஓயாத அலைகள் – 03“ தொடர் நடவடிக்கையின்போது இத்தாவில் பகுதியில் கண்டிவீதியை ஊடறுத்து நிலைகொண்டிருந்த வேளை இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியின்போது எமது மோட்டார் எதிரியின் கையில் அகப்படக்கூடாது என்பதற்காக மற்றவர்களை தளம் அனுப்பிவிட்டு மேட்டாருடன் குண்டை வெடிக்கவைத்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ம் லெப்டினன்ட் இசைவளவன் / நறுமுத்து அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.
02.04.2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் பளைப் பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ தொடர் நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் புவீந்திரன் / மண்ணரசன், லெப்டினன்ட் கூத்தரசன் / நிலவன் ஆகிய வேங்கைகளின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.
02.04.2000 அன்று கிளிநொச்சி மாவட்டம் முகமாலை பகுதியில் “ஓயாத அலைகள் – 03“ தொடர் நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை குயில்வண்ணன், வீரவேங்கை தமிழன்பன் ஆகிய வேங்கைகளின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.
02.04.2000 அன்று மணலாறு கோட்டத்தில் மருதவோடைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் கிட்டு, மேஜர் அன்பு, 2ம் லெப்டினன்ட் ஜெயசீலன், 2ம் லெப்டினன்ட் சங்கர்ராஜ் ஆகிய வேங்கைகளின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.
02.04.2000 அன்று திருமலை மாவட்டம் மூதூர் பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் இளமாறன் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.
02.04.2000 அன்று மட்டக்களப்பு மாவட்டம் சின்னவத்தை பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை குருமதன் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.
02.04.2007 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு கோட்ட கோப்பாவெளிப் பகுதியில் முன்னேற முயன்ற சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் நவசங்கர், மேஜர் விழியரசன், மேஜர் ஜெகநாதன், லெப்டினன்ட் எழில்நிலா, 2ம் லெப்டினன்ட் நிமலன், வீரவேங்கை புவனேந்திரன், வீரவேங்கை சுடரோன், வீரவேங்கை செந்தமிழினி, வீரவேங்கை வசீகமாறன் ஆகிய வேங்கைகளின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
02.04.2007 அன்று வவுனியா மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் திராவிடன் / ஆரியன், லெப்டினன்ட் நெடியோன் ஆகிய வேங்கைகளின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
02.04.2007 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரவேங்கை சுபதீபன் அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாய்மண்ணின் விடிவிற்காக 02.04.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் இளம்புலி, கப்டன் புரட்சித்தம்பி, கப்டன் அமலன், லெப்டினன்ட் கரிகாலினி / மதியருவி, லெப்டினன்ட் பரணி, லெப்டினன்ட் கதிரவன், லெப்டினன்ட் பகீரதன், லெப்டினன்ட் குயிலினி, 2ம் லெப்டினன்ட் போர்வாணன், 2ம் லெப்டினன்ட் இளங்கீரன், வீரவேங்கை பொய்கைக்கிளி ஆகிய வேங்கைகளின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
02.04.2009 அன்று முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருட னான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் அசோக் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.
2ம் லெப்டினன்ட் இளங்கீரன்
குமார் குலேந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.04.2008
2ம் லெப்டினன்ட் போர்வாணன்
இராசு திலீபன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.04.2008
கப்டன் அமலன்
நடராசா கோடீஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.04.2008
கப்டன் புரட்சித்தம்பி
பரஞ்சோதி சிவாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2008
மேஜர் இளம்புலி
கணேசலிங்கம் பிரதீபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.04.2008
லெப்டினன்ட் கதிரவன்
சிவலிங்கம் டினேஸ்குமார்
வவுனியா
வீரச்சாவு: 02.04.2008
லெப்டினன்ட் கரிகாலினி (மதியருவி)
பாலசிங்கம் உசாநிதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2008
லெப்டினன்ட் குயிலினி
சோமசுந்தரம் புஸ்பமலர்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.04.2008
லெப்டினன்ட் பகீரதன்
மகேந்திரராசா ஜெயபிரகாஸ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.04.2008
லெப்டினன்ட் பரணி
பாலச்சந்திரன் றதீபன்
வவுனியா
வீரச்சாவு: 02.04.2008
வீரவேங்கை பொய்கைக்கிளி
பாலசுந்தரம் ஜெயவாணி
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.04.2008
போருதவிப்படை வீரர் சுவிதரன்
விநாயகமூர்த்தி சுவிதரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.04.2008
லெப்டினன்ட் எழில்நிலா
உசுமண்டாப்போடி வசந்தகுமாரி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.04.2007
வீரவேங்கை சுடரோன்
தோலிப்போடி கோகிலன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.04.2007
வீரவேங்கை சுபதீபன்
சிதம்பரநாதன் விஜினோட்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2007
வீரவேங்கை செந்தமிழினி
அழகரெத்தினம் தா்சினி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.04.2007
மேஜர் திராவிடன் (ஆரியன்)
சுப்பிரமணியம் ஜீவராஜ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.04.2007
மேஜர் நவசங்கா்
ஜெயசீலன் காண்டீபன்
அம்பாறை
வீரச்சாவு: 02.04.2007
2ம் லெப்டினன்ட் நிமலன்
ரகுநாதன் லிங்கேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.04.2007
லெப்டினன்ட் நெடியோன்
நல்லையா காசியானந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.04.2007
வீரவேங்கை புவனேந்திரன்
தம்பிஐயா பவானந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.04.2007
வீரவேங்கை வசிகமாறன்
உருத்திரமூர்த்தி தரசீலன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.04.2007
மேஜர் விழியரசன்
சுப்பிரமணியம் மகேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.04.2007
மேஜர் ஜெகநாதன்
நவரட்ணம் சிவசூரியம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.04.2007
மேஜர் பவளரசன்
கந்தவனம் சிவனேசன்
கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.04.2004
லெப்டினன்ட் ஆதி
இராமலிங்கம் பாஸ்கரன்
அல்லிப்பளை, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2002
மேஜர் அமுதா
கந்தையா சரஸ்வதி
கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2000
மேஜர் மதி
கோபாலகிருஸ்ணன் ரஜனி
புன்னன்வளவு, கரணவாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2000
கப்டன் அத்தி
தங்கராசா அமுதினி
ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.04.2000
லெப்டினன்ட் தேன்கவி
பாலசுப்பிரமணியம் பவானி
புன்னாலைக்கட்டுவான் வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 02.04.2000
லெப்டினன்ட் மணிநிலா
அந்தோனி றஞ்சினி
பரந்தன் கிளிநொச்சி.
வீரச்சாவு: 02.04.2000
லெப்டினன்ட் ஈகைநிலா
ஞானசீலன் தங்கலட்சுமி
தோப்புக்காடு, கரைநகர்
வீரச்சாவு: 02.04.2000
லெப்டினன்ட் மதிவதனி
கந்தசாமி வதனி
05ம் வாய்க்கால், பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 02.04.2000
2ம் லெப்டினன்ட் பிரியந்தினி
சரவணமுத்து லலிதாம்பிகை
சேனைப்புலவு, நெடுங்கேணி, வவுனியா
வீரச்சாவு: 02.04.2000
2ம் லெப்டினன்ட் கீர்த்தனா (தமிழினி)
முருகமூர்த்தி கஜேந்தினி
பேராலை, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2000
2ம் லெப்டினன்ட் கிருபாலினி
இராசையா சந்திரகலா
மயில்வாகனபுரம், பிரமந்தனாறு, விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 02.04.2000
2ம் லெப்டினன்ட் கிழிமொழியாள்
சடாச்சரம் செல்வலட்சுமி
மாதகல், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2000
வீரவேங்கை கலைமகள்
சுப்பிரமணியம் சிவதர்சினி
நொச்சிமோட்டை, வவுனியா
வீரச்சாவு: 02.04.2000
வீரவேங்கை பூங்கொடி
ஜெகநாதன் கிமாசலா
ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2000
வீரவேங்கை மதுசா
இரட்ணசிங்கம் தனஜா
மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2000
வீரவேங்கை தமிழிசை (மதுரா)
பத்மநாதன் நிரஞ்சினி
02ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2000
வீரவேங்கை மலைமகள்
மணியம் கௌரி
பாரதிபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 02.04.2000
வீரவேங்கை சர்மிளா
கறுத்தான் மஞ்சுளா
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 02.04.2000
காவல்துறை மாவீரர் விஜயன்
கதிரவேல் விஜயன்
இமையாணன், உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2000
எல்லைப்படை லெப்டினன்ட் விக்னா
தர்மலிங்கம் விக்னராசா
மாயக்கை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2000
எல்லைப்படை வீரவேங்கை துஸ்
சுந்தரம் துஸ்யந்தன்
தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2000
லெப்டினன்ட் புவீந்திரன் (மண்ணரசன்)
யோகநாதன் கேதீஸ்
மல்லாகம் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2000
லெப்டினன்ட் கூத்தரசன் (நிலவன்)
கவிரியன் குணசேகரன்
வஞ்சியன்குளம், நானாட்டான், மன்னார்.
வீரச்சாவு: 02.04.2000
2ம் லெப்டினன்ட் காண்டீபன்
புவனேந்திரன் சாள்ஸ்அமிர்தராஜ்
வசாவிளான் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2000
வீரவேங்கை காந்தன்
பழனியாண்டி யோகநாதன்
மொட்டைப்பாலம், இரணைமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 02.04.2000
கப்டன் நெடுங்கீரன்
கந்தையா சுபாஸ்கரன்
புத்தூர் மேற்கு, நவக்கிரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2000
மேஜர் இளவரசன்
செல்வராசா அச்சுதன்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2000
வீரவேங்கை குயில்வண்ணன்
காளிமுத்து கோகுலன்
பாவற்குளம், வவுனியா.
வீரச்சாவு: 02.04.2000
வீரவேங்கை தமிழன்பன்
தங்கத்துரை விஸ்வநாதன்
அடம்பன், குடத்தனை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2000
மேஜர் சேரமகன் (முகுந்தன்)
சவுந்தரராஜன் ரவீந்திரன்
அக்கரைப்பற்று, அம்பாறை
வீரச்சாவு: 02.04.2000
மேஜர் றோய் (கௌதமன்)
கந்தசாமி நிர்மலராஜ்
சிவபுரி, திருகோணமலை.
வீரச்சாவு: 02.04.2000
கப்டன் யசோதினி
சரவணமுத்து இரத்தினேஸ்வரி
மந்துவில், கொடிகாமம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2000
கப்டன் மனைமதி
அருளானந்தசிவம் பிரமிளா
சித்தங்கேணி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2000
கப்டன் திவ்வியா
விநாயகமூர்த்தி சாந்தினி
ஆலங்கேணி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 02.04.2000
லெப்டினன்ட் இளமாறன்
இராசரட்ணம் இராஜேந்திரம்
7ம் வட்டாரம், சாலையூர், கட்டைப்பறிச்சான், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 02.04.2000
வீரவேங்கை குருமதன்
கணேஸ் சவுந்தரராஜா
நாவிதன்வெளி, கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 02.04.2000
மேஜர் அன்பு
ஞானமணி சந்திரன்
கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.04.2000
மேஜர் சிட்டு
வடிவேல் றாஜ்குமார்
தீலுக்காலை, அக்கரைப்பற்று, அப்பாறை
வீரச்சாவு: 02.04.2000
மேஜர் சசிக்குமார்
சின்னத்தம்பி அமிர்தலிங்கம்
சொருவில், மன்னம்பிட்டி, பொலநறுவை
வீரச்சாவு: 02.04.2000
2ம் லெப்டினன்ட் தயாமோகன்
மூத்ததம்பி மனோகரன்
35ம் கிராமம், வைக்கலை மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.04.2000
2ம் லெப்டினன்ட் தயாளசீலன்
முருகமூர்த்தி கணேசமூர்த்தி
மாவில்குடா, பளுகாமம், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.04.2000
2ம் லெப்டினன்ட் ஜெயசீலன்
சிவராசா விவேகானந்தன்
தும்பங்கேணி, திக்கோடை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.04.2000
2ம் லெப்டினன்ட் சங்கர்ராஜ்
இராமச்சந்திரன் சசிக்குமார்
ஆறுமுகத்தான் குடியிருப்பு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.04.2000
எல்லைப்படை வீரவேங்கை சிவா
சிறிசேனா சிவலோகநாதன்
பாலிநகர், வவுனிக்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.04.2000
மேஜர் லக்சனா
ஆனந்தராஜா கௌரி
தோப்பூர் தெற்கு, புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2000
மேஜர் அரசி (இதயா)
பசுபதிப்பிள்ளை ஜெயறஞ்சினி
வண்ணாங்கேணி, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2000
வீரவேங்கை மறைவாணன்
மாயழகு சிவானந்தன்
இளமருதங்குளம், சேமமடு, வவுனியா
வீரச்சாவு: 02.04.1999
வீரவேங்கை தனிமதி
காளிமுத்து சரஸ்வதி
வெருகல், மாவடிச்சேனை, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 02.04.1998
2ம் லெப்டினன்ட் ஒளிக்கண்ணன்
நிமலச்சந்திரன் விஜேந்திரன்
இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 02.04.1998
லெப்டினன்ட் எழிலன்
நவரத்தினம் மகேஸ்வரன்
மாவிட்டபுரம் தெற்கு, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம
வீரச்சாவு: 02.04.1997
கப்டன் பெருவழுதி (பவுணன்)
நாகப்பிள்ளை அமுதாகரன்
நடுபிரபந்திடல், தம்பலகமம், திருகோணமலை
வீரச்சாவு: 02.04.1996
கப்டன் கோபினி
வேலாயுதம் புஸ்பமாலா
கந்தளாய், திருகோணமலை
வீரச்சாவு: 02.04.1996
வீரவேங்கை மஞ்சித்
ரமேஸ் றொபேட்
செட்டிகுளம், வவுனியா
வீரச்சாவு: 02.04.1991
வீரவேங்கை சிவகாந்தன்
அ.தவநேசன்
சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.1991
கப்டன் சத்தியன்
புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி
தங்கநகர், கிளிவெட்டி, திருகோணமலை.
வீரச்சாவு: 02.04.1989
வீரவேங்கை லிங்கன்
நல்லதம்பி அன்ரனி
கறுவாக்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 02.04.1988
லெப்டினன்ட் பாபு
செல்வநாயகம் ரவீந்திரன்
ஊரிக்காடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 02.04.1987
2ம் லெப்டினன்ட் மார்சல்
விக்கினராசா சந்திரவேல்
வெள்ளாங்குளம், முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 02.04.1987
2ம் லெப்டினன்ட் ஜஸ்ரின்
ஜோசப்தனசீலன் மைக்கல் அன்ரன்
தலைமன்னார், மன்னார்
வீரச்சாவு: 02.04.1987
வீரவேங்கை நடா
தங்கராசா நடராசா
வலையிறவு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 02.04.1987
கப்டன் முரளி
கந்தசாமித்துரை சிறீகரன்
வேம்படி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 02.04.1987
2ம் லெப்டினன்ட் சேவியர்
யோசப் தனசீலன்
வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 02.04.1987
வீரவேங்கை பாலச்சந்தர்
ஞானச்சந்திரன் லக்ஸ்மிகரன்
முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 02.04.1987
வீரவேங்கை விடுதலை
ஜோன்பொஸ்கோ யோகநாதன்
தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.1987
வீரவேங்கை சங்கர்
கந்தப்பு சூரியகுமார்
கரவெட்டி மத்தி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 02.04.1987
வீரவேங்கை விந்தன்
பூபாலசுந்தரம் ஞானகுரு
பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 02.04.1987
வீரவேங்கை சிவா
சின்னத்தம்பி சிவதாஸ்
கரணவாய் கிழக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 02.04.1987
வீரவேங்கை நடா
தங்கராசா நடராசா
வலையிறவு மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.04.1986
2ம் லெப்டினன்ட் வதனன்
சபாபதி சிவபாலன்
வாரிக்குட்டியூர், வவுனியா.
வீரச்சாவு: 02.04.1986
வீரவேங்கை பெஞ்சமின்
கந்தையா பாலசுந்தரம்
சேனைப்புலவு, நெடுங்கேணி, மணலாறு .
வீரச்சாவு: 02.04.1986
வீரவேங்கை மோகன்
யாக்கோப் தற்குரூஸ் அலெக்சாண்டர்
தோட்டவெளி, தாராபுரம், மன்னார்.
வீரச்சாவு: 02.04.1986
வீரவேங்கை ஜோன்
ஞானப்பிரகாசம் லேனாட் கிறிஸ்ரி மொறாயஸ்
வங்காலை, மன்னார்
வீரச்சாவு: 02.04.1986
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…