லிபிய கவிஞர் புயல்களில் சிக்கி இறப்பதற்கு முன் டேர்னாவில் வெள்ள அபாயத்தை எச்சரித்தது தெரிய வந்துள்ளது. புயல் மற்றும் கனமழை காரணமாக லிபியாவில் உண்டான பெருவெள்ளம் டேர்னா நகரை சிதைத்துள்ளது. இதுவரை 20,000 பேர் இறந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், 10000 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை.
இந்த நிலையில் லிபிய கவிஞர் முஸ்தபா அல்-ட்ராபெல்சி கவிதை மூலம் வெள்ளம் குறித்து எச்சரிக்கை செய்தது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
கவிஞர் முஸ்தபா கடந்த 6ஆம் திகதி, கவிதை எழுதுவதற்கு சில நாட்களுக்கு முன், நகரத்தில் வெள்ள அபாயம் மற்றும் அணைகளின் நிலை குறித்து விவாதிக்க டேர்னா கலாச்சார இல்லத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அவர் எழுதிய கவிதை ஒன்று வெள்ளம் குறித்து முன்னரே எச்சரிக்கை செய்யும் வகையில் அமைந்துள்ளது. அதில், டேர்னாவின் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கேட்காத ஒரு எச்சரிக்கை மணி இது என்று இயற்கை பேரழிவை அவர் குறிப்பிட்டார்.
இந்த கவிதையை தற்போது மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கின்றனர்.
இதற்கிடையில், புயலின் இரவு அன்று 7.44 மணியளவில் முஸ்தபா தனது முகநூல் பக்கத்தில், ‘காட்சிகள் பயங்கரமானவை, மேலும் விடயங்கள் பேரழிவாக மாறக்கூடும். மேலும் தரவுகளைத் தவிர வேறு எதுவும் இல்லாத ஒரு ஊழல் கொடுங்கோலரின் ஆட்சியில் நாங்கள் இருக்கிறோம். தயாராக இருக்க வேண்டும். உண்மையில், எந்த உபகரணமும் இல்லை, மற்றும் மீட்புக் குழுக்கள் சில மட்டுமே இருக்கின்றன’ என எழுதினார்.