இரசிய படைகளிடமிருந்து 7 கிராமங்களை மீட்ட உக்ரைன்!

You are currently viewing இரசிய படைகளிடமிருந்து 7 கிராமங்களை மீட்ட உக்ரைன்!

இரசியப் படைகளிடமிருந்து 7 கிராமங்களை மீட்டதாக உக்ரைன் கூறுகிறது. கடந்த மூன்று நாட்கள் நடந்த தாக்குதல் நடவடிக்கைகளில் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள ஏழு கிராமங்களை ரஷ்யப் படைகளிடம் இருந்து மீட்டதாக உக்ரேனிய துணை பாதுகாப்பு அமைச்சர் கன்னா மல்யார் டெலிகிராமில் அறிவித்துள்ளார்.

உக்ரைன் கிழக்கு நகரமான பாக்முட் அருகே மேற்கத்திய ஆயுதங்கள் மூலம்நீண்ட காலமாக திட்டமிடப்பட்ட எதிர்த்தாக்குதலை நிகழ்த்தி இந்த கிராமங்களை மீண்டும் கைப்பற்றியயதாக கீவ் தெரிவித்துள்ளது.

தெற்கு சபோரிஜியா பிராந்தியத்தில் உள்ள லோப்கோவோ, லெவாட்னே மற்றும் நோவோடரிவ்கா ஆகிய கொன்று கிராமங்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதாகவும், அவற்றுக்கு அருகில், டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் தெற்கில் உள்ள ஸ்டோரோஷேவ் கிராமத்தின் கட்டுப்பாட்டையும் உக்ரேனியப் படைகள் மீட்டுள்ளதாக கன்னா மல்யார் கூறினார்.

கட்டுப்பாட்டின் கீழ் எடுக்கப்பட்ட பிரதேசத்தின் பரப்பளவு 90 சதுர கிலோமீட்டர்கள் என்று மல்யர் கூறினார்.

உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம், அதன் படைகள் ஃபிளாஷ் பாயிண்ட் நகரமான பாக்முட்டின் திசையில் 250 முதல் 700 மீட்டர்கள் முன்னேறியதாக தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply