கிளிநொச்சி – பூநகரி, இரணைதீவில் கடும் மழை காரணமாக, தற்காலிக குடிசைகளில் இருந்த மக்கள், தேவாலயத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக, புநகரி பிரதேச சபையின் உப தவிசாளர் மு.எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் இரணைதீவில் குடியேறிய குடும்பங்கள் தற்காலிக குடிசைகளில் வாழ்ந்து வந்தனர் எனவும் இந்நிலையில், கடந்த இரு நாள்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, தற்காலிக குடிசைகளில் வசிக்க முடியாத நிலையில், அக்குடும்பத்தினர் தேவாலயத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர் எனவும் கூறினார்.
இதேவேளை, அட்டைப் பண்ணையில் காவல் புரிந்தவர்கள், கடற் சீற்றம் காரணமாக, தமது உபகரணங்களுடன் இரணைதீவுக்கு திரும்பி உள்ளனர் எனவும் இரணைதீவில் உள்ள மக்களுக்கு மழை கால இடர் உதவிகள் தேவைப்படுவதாகவும், அவர் தெரிவித்தார்.