இரணைமடு வாய்க்காலில் விழுந்து ஒன்றரை வயதுக் குழந்தை மரணம்!

You are currently viewing இரணைமடு வாய்க்காலில் விழுந்து ஒன்றரை வயதுக் குழந்தை மரணம்!

கிளிநொச்சி மருதநகர் பகுதியில் ஒன்றரை வயது குழந்தை நீர்ப்பாசன வாய்க்காலுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த நிசாந்தன் சபீசன் என்ற குழந்தையே இதன் போது உயிரிழந்துள்ளது.

நேற்று மாலை 6.00 மணியளவில் வீட்டின் அருகில் இரணைமடு நீர்ப்பாசன வாய்க்கால் காணப்படுகிறது. தற்போது அவ்வாய்க்கால் சிறுபோக நெற்செய்கைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் அதிகளவு நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்குள் வீழ்ந்த குழந்தை வீழ்ந்த இடத்திலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரம் வரை நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் உயிரிழந்த நிலையில் அயலவர்களினால் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிளிநொச்சி சிறீலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகிறார்கள்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply