இரண்டு தாய்மார்களின் இறப்பு! சோகத்தில் மக்கள்!

You are currently viewing இரண்டு தாய்மார்களின் இறப்பு! சோகத்தில்  மக்கள்!

வவுனியா – மகாறம்பைக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து இன்று (03) குடும்ப பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

சடலமாக மீட்கப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயாரான காண்டீபன் கோமதி (வயது-59) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த உறவினர்கள், வழமைபோன்று நித்திரைக்கு சென்றவரை காலையில் காணவில்லை என தேடிய போது கிணற்றினுள் சடலமாக காணப்பட்டதாக தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா காவல்த்துறையினர் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை “தனது சாவுக்கு பிள்ளைகள் காரணமில்லை. எனது உடலை கீறவோ வெட்டவோ வேண்டாம்” என்று குறித்த தாயால் எழுதப்பட்டதாக நம்பப்படும் கடிதம் ஒன்று காவல்த்துறையால் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை

கிளிநொச்சியில் – கல்மடு பகுதியைச் சேர்ந்த இளம் வயது கர்ப்பிணி தாயொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சம்புக்குளம் கல்மடு பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி தாயொருவர் நேற்று (02) காலையிலிருந்து கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இருப்பினும் அது சிறுநீர் நோய் தொற்று காரணமாக ஏற்பட்ட வயிற்று வலி என எவரும் அதனைப் பொருட்படுத்தவில்லை.

இந்நிலையில் பிற்பகல் திடீரென மயங்கி விழுந்த அவரை, தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அதன்பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும் அவர் அதிக இரத்தப்போக்கு காரணமாக  உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் 2007ம் ஆண்டிற்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது கர்ப்பகால மரணம் இது என்பதால் முழு வைத்தியசாலையும் தற்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
கர்ப்ப காலங்களில் ஏற்படும் வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, தலைசுற்றல் முதலிய எந்த ஒரு அறிகுறிகளையும் கர்ப்பிணிப் பெண்கள், சாதாரணமாக எடுக்காமல் உடனடியாக தமது பகுதி குடும்ப நல உத்தியோத்தர்களிடம் தொடர்புகொண்டோ அல்லது அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு சென்று ஆலோசனை பெற்றோ கர்ப்ப காலங்களில் ஏற்படக்கூடிய இவ்வாறான அபாய நிலைகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள