ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டில் இராணுவ ஆட்சியை உருவாக்குகிறார் என முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம்சாட்டியுள்ளார்.
அமைச்சுகளின் செயலாளர்களாக இராணுவ அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் நாட்டில் இராணுவ ஆட்சியை உருவாக்குவதற்கான முயற்சியில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளிற்கு எதிராக அனைத்து கட்சிகளும் அணி திரளவேண்டும்.
சில பதவிகளிற்கு முதல்தடவை இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுகாதார நீர்ப்பாசன விவசாய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்களாக இராணுவ அதிகாரிகளே காணப்படுகின்றனர். இதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இவ்வாறான ஜனநாயக விரோத நடவடிக்கைகளிற்கு எதிராக மக்கள் அணிதிரளவேண்டும்” எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.