உக்ரைன் மீது ரஷியாவும், ரஷியா மீது உக்ரைனும் தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. சுமார் 3 ஆண்டுகளாக இந்த பரஸ்பர தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. தாக்குதல் முடிவுக்கு வருவது போன்று தெரியவில்லை.
இந்த நிலையில் நேற்று ரஷியாவின் ராணுவ வசதிகள் (ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் இடங்கள்) மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தியதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது..
200 கி.மீ. முதல் 1100 கி.மீ. வரை ரஷியாவின் உட்பகுதியில் தாக்குதல் நடத்தினோம் என உக்ரைன் தெரிவித்துள்ளது.
பிரையன்ஸ்க், சரடோவ், டுலா மாகாணங்களில் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
சரடோவ் மாகாணத்தில் உள்ள ஏங்கல்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் சேகரித்து வைக்கும் கிரிஸ்டால் நிலையம் மீது தாக்குதல்.
பிரையன்ஸ்க் மாகணத்தின் செல்ட்சோவில் உள்ள பிரையன்ஸ்க் கெமிக்கல் நிலையம் மீது தாக்குதல் (இது ராக்கெட், குண்டுகள் தயாரிப்தற்கான வெடிப்பொருட்களை தயாரிக்கும் வசதி கொண்ட நிலையம்)
சரடோவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையம், கசனோர்க்சின்டெஸ் நிலையம் ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஷிய ராணுவ வசதிகள் அழிக்கப்படுவது தொடர்கிறது. உக்ரைனுக்கு மகிமை எனத் தெரிவித்துள்ளது.