இருப்பை தக்கவைத்துக் கொள்ளவே தடை நீக்கம்!இது தேசத்துராேக செயலாகும்!

You are currently viewing இருப்பை தக்கவைத்துக் கொள்ளவே தடை நீக்கம்!இது தேசத்துராேக செயலாகும்!

ஜனாதிபதி தனது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவே தமிழ் அமைப்புகளின் தடையை நீக்கி இருக்கின்றார். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் அத்துடன் இது தேசத்துராேக செயலாகும் என தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் குணதாச அமரசிங்க தெரிவித்தார்.

தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் வியாழக்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், டயஸ்போராவுடன் சம்பந்தப்பட்ட 6 அமைப்புகளுக்கான தடையை நீக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்திருக்கின்றார்.

ரணில் விக்ரமசிங்கவின் இந்த நடவடிக்கையானது, மக்களின் நலன் கருதியோ நாட்டின் நன்மைக்கோ மேற்கொள்ளப்பட்டதல்ல, மாறாக அவரின் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான விளையாட்டாகும். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அத்துடன் ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை தேசத்துராேக செயலாகும். அத்துடன் இந்த அமைப்புகளை தடைப்பட்டியலில் இருந்து எந்த அடிப்படையில் நீக்கியது என்பதை ஜனாதிபதி அறிவிக்கவேண்டும். ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.

ஆனால் அதில் எதுவும் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. அதனால் இதுதொடர்பாக அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது.

மேலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெற இருக்கின்றது. இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம் தொடர்பில் நல்லெண்ணத்தை பெற்றுக்கொள்ளவே இந்த 6அமைப்புகளின் தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவே எமக்கு தோன்றுகின்றது.

அத்துடன் நாடு பாரிய பயங்கரவாத யுத்தத்தக்கு முகம்கொடுத்திருக்கும்போது, பயங்கரவாதிகளுக்கு உதவி செய்த அமைப்புகளே தற்போது தடையும் செய்யும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றது.

நாட்டை பாதுகாத்த இராணுவத்தினரை காட்டிக்கொடுக்கும் செயலாகவே இதனை நாங்கள் காண்கின்றோம். இதுதொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply