இலங்கைக்கு நீடிக்கப்பட்ட நிதி வசதி உதவியை பெற்றுக் கொடுப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதியை வழங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தினூடாக, இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி வழங்கும் அமைப்புகள் மற்றும் பரஸ்பர உதவியளிக்கும் அமைப்புகளிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் பெரும்பொருளாதார உறுதித் தன்மையை மீள நிலைநாட்டவும், கடன் மீளச் செலுத்தக்கூடிய உறுதித் தன்மையையும் எய்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கும் நிலையில், இலங்கையைப் பொறுத்தமட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளது.
இதனூடாக பொருளாதாரத்தை பல சவால்களிலிருந்து மீட்டு, சகல பங்காளர்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும்.