சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவரின் அண்மைய இலங்கை பயணத்தின் அடிப்படையில், ஐந்தாண்டு காலத்துக்கு இலங்கைக்கு மேலதிகமாக 65 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அமெரிக்க தூதுவர் அறிவித்துள்ளார்.
இந்த நிதியானது இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்காக, கடந்த வாரம் சமந்தா பவர் அறிவித்த புதிய மனிதாபிமான மற்றும் உர உதவியான 60 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது என அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கேப்ரியல் கிராவ் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன ஆகியோர் இது தொடர்பான உடன்படிக்கையில் நேற்று கைச்சாத்திட்டுள்ளனர்.