இலங்கையின் கிழக்கு கடற்கரையிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் நேற்று மாலை 6.46 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் கிழக்கு கடலுக்கடியில் நேற்று மாலை நிலநடுக்கம்!
