இலங்கையின் பழிவாங்கல் செயற்பாடுகளை ஆவணப்படுத்திய ஐ.நா. பொதுச் செயலாளர்!

You are currently viewing இலங்கையின் பழிவாங்கல் செயற்பாடுகளை ஆவணப்படுத்திய ஐ.நா. பொதுச் செயலாளர்!

ஐ.நா.வுடன் ஒத்துழைத்ததற்காக இலங்கை உட்பட 45 நாடுகளில் சுமார் 240 சிவில் சமூக பிரதிநிதிகள், மனித உரிமைச் செற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பழிவாங்கல் மற்றும் மிரட்டல்களுக்கு உள்ளான சம்பவங்களை ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் ஆவணப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவங்களை ஆவணப்படுத்தும் அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகளுக்கான உதவி பொதுச் செயலாளர் பிராண்ட்ஸ் கெஹ்ரிஸ் ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று முன்தினம் கையளித்தார்.

மனித உரிமைகள் பேரவை 30/1 தீர்மானத்தை ஆதரித்தவர்கள் உட்பட இலங்கையில் உள்ள சிவில் சமூக அமைப்புகளைச் சோ்ந்தோர், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீதான தீவிர கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிகிறது என ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் தனது பெப்ரவரி 9, 2021 அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நடவடிக்களை மனித உரிமை மற்றும் ஜனநாயக செயற்பாடுகள் குறித்த கேள்வியை உருவாக்குகிறது மற்றும் சுய தணிக்கைக்கு வழிவகுக்கிறது என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் கவலை தெரிவித்தார்.

மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டார்கள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீதான அரச முகவர்களின் மிரட்டல், துன்புறுத்தல் மற்றும் அனைத்து வகையான கண்காணிப்புகளையும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவருமாறு அவா் வலியுறுத்தினார்.

2021- மார்சில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 46/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கையில் சிரேஷ்ட அரச அதிகாரி ஒருவர் அரச ஊடகத்தின் மூலம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துழைத்துச் செயற்பட்டவர்களை விமர்சித்தார். இத்தகையவர்களை துரோகிகள் என அவர் வர்ணித்தார் எனவும் ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply