இலங்கையின் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகளிற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது!

You are currently viewing இலங்கையின் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகளிற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது!

இலங்கை அரசாங்கம் மிகமோசமான உணவுப்பாதுகாப்பின்மை மற்றும் ஏனைய பிரச்சினைகளை எதிர்கொண்;டுள்ளது எனினும் புதிய அரசாங்கம் அமைதியான ஆர்ப்பாட்டங்கள்  மற்றும் செயற்பாட்டாளர்களை ஒடுக்குவது குறித்தே கவனம் செலுத்துகின்றது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான மனித உரிமை கண்காணிப்பகத்தின்  மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பாரிய நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக அரசாங்கம் பொது மற்றும் சர்வதேச நிதியமைப்புகளுடன் இணைந்து செயற்படவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறைந்து வருமானம் காரணமாக வாழ்வதற்கு சிரமப்படும் கொழும்பை சேர்ந்த 20 பேருடன் ஜூலை மாதம் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் நேர்காணலை மேற்கொண்டது.பணவீக்கம் 50 வீதத்திற்கும் அதிகமாக காணப்படுகின்றது சில அத்தியாவசிய பொருட்களை பெறவேமுடியாத நிலை காணப்படுகின்றது.

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் நேர்காணல் கண்டவர்கள் தாங்கள் தங்கள் உணவை நாளொன்றிற்கு இரு தடவையாக குறைத்துள்ளதாகவும் மின்சாரக்கட்டணம் வீட்டு வாடகை போன்றவற்றை செலுத்துவதற்காக கடன்பெறுவதாகவும் தெரிவித்தனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply