இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பத்திரிகையாளர் கொரோனாவினால் மரணம்!

You are currently viewing இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பத்திரிகையாளர் கொரோனாவினால் மரணம்!

இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பத்திரிகையாளர் முபீதா உஸ்மான் தனது 74ஆவது வயதில் காலமானார். நேற்று திடீரெனெ நோய்வாய்ப்பட்ட அவர், சாய்ந்தமருது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில், இரவு மரணமடைந்துள்ளார். அன்டிஜன் பரிசோதனையின்போது அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

கொழும்பை பிறப்பிடமாகவும் சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும் கொண்ட முபீதா உஸ்மான், 55 வருடங்களுக்கு மேலாக கலை, இலக்கிய, ஊடகத்துறை மற்றும் சமூகப் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்துள்ளார்.

இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பத்திரிகையாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அவர், தினபதி, சிந்தாமனி பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியிருப்பதுடன், அரசாங்க தகவல் திணைக்களத்தில் பிரசார உத்தியோகத்தராகவும் பத்திரிகைத் தொடர்பு உத்தியோகத்தராகவும் பல வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.

கலை, இலக்கிய மற்றும் ஊடகத்துறை பணிகளுக்காக 2008ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாபூசணம் விருதையும் ஊடகத்துறை சேவைக்காக 2013ஆம் ஆண்டு கிழக்கு மாகாண கல்வி, கலாசார, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஊடக வித்தகர் எனும் முதலமைச்சர் விருதையும் பெற்றிருக்கிறார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply