இலங்கையில் இது கொந்தளிப்பான காலகட்டம்!

You are currently viewing இலங்கையில் இது கொந்தளிப்பான காலகட்டம்!

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் தொடர்வதால், இலங்கை முழுதும் கொந்தளிப்பான நிலையை அனுபவித்து வருகின்றதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

தொற்றுநோயால் பொருளாதாரத் தவறுகள் அதிகரித்துள்ளன, இதன் விளைவாக பணவீக்கம் அதிகரித்து உணவு, எரிபொருள் மற்றும் மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பொது நிதியை முறைகேடாக நிர்வகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை அரசாங்கத்தின் தலைமைத்துவத்தை மாற்றுமாறு இந்த மக்கள் போராட்டங்கள் கோருகின்றன.

இலங்கை தொடர்பான நடவடிக்கைகளை நியூசிலாந்து அரசாங்கம் கண்டிக்க வேண்டும் என்று கோரி நியூசிலாந்து வாழ் இலங்கையர்கள் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் தலைமையை கண்டிக்கின்றீர்களா? என்று கேட்கப்பட்டபோது, ஆர்டெர்ன் சிறிது நேரம் உரையை நிறுத்தினார்.

ஆனால் இலங்கை மக்களிடையே வளர்ந்து வரும் விரக்தியை ஒப்புக்கொண்டார்.

இலங்கையில் இது மிகவும் கொந்தளிப்பான காலகட்டம் என்று அவர் கூறினார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply