இலங்கையில் ஊரடங்கு உத்தரவு மீறல் 9067 பேர் மீது தண்டனை விதிப்பு!

You are currently viewing இலங்கையில் ஊரடங்கு உத்தரவு மீறல் 9067 பேர் மீது தண்டனை விதிப்பு!

ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று அதிகாலை வரையிலான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 66,662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 18,778 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மார்ச் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் இன்று வரையிலான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 22,591 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் 9067 பேருக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள